ஐயோ பாவம்; அவசர உலகம்!

Posted: 17/01/2014 in கட்டுரை
அலுவலகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது காய்கறி விற்பனை பற்றி பேச்சு வந்தது. ‘காய்கறிகளை வீட்டுக்கு வாங்கிச் சென்று சுத்தம் செய்து, நறுக்கி, சமையல் செய்யும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்களுக்கு வசதியாக, நறுக்கிய காய்கறி, நம் ஊரில் விற்கின்றனர்.அதையும், நம்மாட்கள் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர்’ என்றார்,  நண்பர். 
‘சென்னையில் குழம்பு மட்டும் தயார் செய்து விற்கின்றனர். அதுவும் நம் ஊருக்கு விரைவில் வந்து விடும்’ என்றார். ‘இது அவசர உலகம். ரெடிமேட் ஆக எது கிடைத்தாலும் மக்கள் வாங்கத் தயார் ஆகி விட்டனர்’ என்றார், நண்பர். அது, உண்மை தான். 
பொங்கலுக்கு முதல் நாள் காப்பு கட்டுதல் தமிழர் மரபு. மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றைக் கொண்டு காப்பு கட்டினால், துஷ்ட சக்திகள் வீட்டை நெருங்காது என்பது ஐதீகம்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை காப்பு கட்டுவதற்குரிய இலை, தழைகளை விலை கொடுத்து வாங்குவோர் எவரும் இல்லை. விற்கும் எண்ணமும் எவருக்கும் வரவில்லை. தோட்டம், காடு, பள்ளம், படுகையில் தேடி காப்பு கட்டுவதற்கான இலை தழைகளை,ஆண்கள் சேகரித்து வருவர்.
ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு, உறவுக்காரர்கள் வந்து காப்பு கட்டி விடுவர். இதுதான் அப்போதைய நடைமுறை. ஆனால், இப்போது நடப்பதென்ன? காப்பு கட்டும் நாளில்  இலை,தழைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. வீதிக்கு வீதி, பொது இடங்களில், காடு மேடுகளில் எல்லாம் இருக்கும் வேப்ப மரத்துக்கு அவ்வளவு கிராக்கி.
‘வேப்பிலை கொத்து ஐந்து ரூபாய்’ என்பதை மறு பேச்சு பேசாமல் வாங்கிச்செல்கின்றனர், மக்கள். இலவசமாகவே ஊருக்குள் கிடைத்தாலும், அதை தேடிச்சென்று சேகரிக்கவோ, மரம் ஏறி பறிக்கவோ யாரும் தயாரில்லை. கேட்கும் காசைக் கொடுத்து வியாபாரியிடம் வாங்கிச் செல்லவே பலரும் விரும்புகின்றனர். இந்த அவசரத்தை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் நாட்டில் ஆயிரமாயிரம் பேர் காத்துக்கிடக்கின்றனரே!
காப்பு கட்டும் தினமான திங்கட்கிழமை அதிகாலை முதலே ஆரம்பமாகி விட்டது, சூப்பர் வியாபாரம்! சாலையோரங்களில் எல்லாம் சைக்கிள்களிலும், கூடைகளிலும் வைத்து விற்பனை கனஜோராக நடந்தது. வேப்பிலைக்கொத்து ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை,ஆவாரம் பூ, பூளைப்பூ, மாவிலை எல்லாம் சேர்ந்த கட்டு, பத்து, இருபது, முப்பது என்று கொத்துக்கு தகுந்தபடி விலை.
வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, பொது இடங்களில் கூட வளர்ந்து நிற்கும் வேப்ப மரத்தின் இலையைப் பறித்து, கட்டுக்கட்டினால், அதையும் விற்று காசாக்க முடியும் என்று காட்டி விட்டனர், தமிழர்கள்! என்ன செய்வது? அவசரஉலகம்; ஐயோ பாவம்! 
பின்னூட்டங்கள்
  1. chitrasundars blog சொல்கிறார்:

    விற்பவர்கள் கஷ்டப்பட்டு பறித்துவந்து விற்பனை செய்வதை, காசு இருப்பதால்தானே கொடுத்து வாங்குகிறார்கள். ஏதாவதொரு வகையில் பணப்புழக்கம் ஏற்படுவது நல்லதுதானே !!

    Like

    • aarumugamayyasamy சொல்கிறார்:

      வாங்க மேடம். தமிழ்நாட்டுல எதை வித்தாலும் வாங்குறதுக்கு தயாரா ஒரு கூட்டம் உருவாயிட்டுது மேடம். கஷ்டப்பட்டு பறிச்சுட்டு வாரவங்க உழைப்ப நிச்சயம் பாராட்டுவோம் மேடம். ஆனா பக்கத்துல இருக்குற வேப்ப மரத்துல வேப்பிலை பறிக்கக்கூட முடியாத சோம்பேறித்தனத்தை வெளிப்படுத்துறது தான் பதிவோட நோக்கம். வருகைக்கு நன்றி மேடம்!

      Like

  2. A.keerthika சொல்கிறார்:

    Keerthi

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s