அன்று காலை 6 மணிக்கெல்லாம் காவல் நிலையம் பரபரப்பாகி விட்டது. போலீசார் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் கைவிரல் ரேகை எடுக்கும் தடய அறிவியல் நிபுணரை போனில் பிடித்து உடனடியாக வருமாறு வேண்டிக்கொண்டிருந்தார். இன்னொருவர், மோப்பநாய் பிரிவினரை கையோடு அழைத்து வர ஜீப் டிரைவரை விரட்டிக் கொண்டிருந்தார்.
விசாரணைக்காக விரைந்து வரும் மைக் 10, மைக் 11 ஆகியோருக்கு காபி, டிபன் ஏற்பாடு செய்யும்படி எஸ்ஐக்கு உத்தரவுகள் ஏற்கனவே வந்து விட்டன. நகரின் பிரபல ஓட்டலுக்கு ஆள் அனுப்பியாகி விட்டது. குற்றப்பிரிவு போலீசார் பாவம், குற்றவாளிகளைப் போல் பம்மிப் பதுங்கியபடி இருந்தனர். எல்லாவற்றுக்கும் காரணம், முதல் நாள் இரவில் நடந்த திருட்டு சம்பவங்கள் தான். திருட்டென்றால் சாதா திருட்டல்ல; இது ஸ்பெஷல் திருட்டு.
‘நகரில் நான்கு வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் வக்கீல் அலுவலகங்களில் பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. பீரோவும் உடைக்கப்பட்டிருக்கிறது. என்னவெல்லாம் திருட்டு போயிருக்கின்றன என்று சம்மந்தப்பட்ட வக்கீல்கள் வந்தால்தான் தெரியும்’ என்றார், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர். குற்றப்பிரிவு போலீஸார் வசமாக சிக்கியிருப்பதை எண்ணியெண்ணி பூரித்துக்கொண்டிருந்தார் அவர்.
எனக்கு பெருத்த சந்தேகம். ”சார்! வக்கீலுங்க ஆபீசுல என்ன பணம், நகையா வெச்சுருக்கப் போறாங்க? இதுக்கு ஏன் சார் இவ்வளவு பரபரப்பு?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.
அவர் வக்கீல்களுடன் அதிக சகவாசம் வைத்திருப்பவர். ”சார்! வக்கீல் ஆபீஸ்ல விலை மதிப்புள்ள பொருள் இருக்காதா? என்ன நடக்கப் போகுதுன்னு வேடிக்கையப் பாருங்க சார் நீங்க”
எனக்கும் அவர் சொல்வதில் விஷயம் இருப்பதுபோல் தோன்றியது. காத்திருந்தேன். சிறிது நேரத்திலேயே நான்கைந்து வக்கீல்கள் பதட்டத்துடன் ஓடி வந்தனர். பார்த்தால் பேயறைந்தவர்கள் போல் இருந்தனர். கடைசியாக வந்த ஒருவரை நிறுத்தி, ‘என்ன சார், என்ன திருட்டு போச்சு’ என்றேன். அவரோ, ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!’ என்று கூவியபடியே இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடினார்.
சில வினாடிகளிலேயே அவர்கள் சங்க தலைவரும் வந்து விட்டார். அவரிடமும் கேட்டேன். ”நெறய வேல்யபிள் ஐட்டம்ஸ் போயிட்டதா அட்வகேட்ஸ் போன் பண்ணாங்க, இருங்க இன்ஸ்பெக்டர பாத்துட்டு வரேன்,” என்று சொல்லி விட்டுப் போனார். எனக்கு மண்டை காய்ந்தது. வக்கீல் அலுவலகங்களில் அப்படியென்ன விலை மதிப்புள்ள பொருள் இருக்கப் போகிறது?
அதற்குள் எஸ்பி, கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் வந்து விட்டனர். கை ரேகை நிபுணரும், மோப்ப நாய்ப்படையினரும் வந்து விட்டனர். ‘திருடர்களை உடனடியாக பிடித்தாக வேண்டும்’ என்று எஸ்பி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார். வேதனை தோய்ந்த முகத்துடன் இருந்த வக்கீல்கள், அவரை சுற்றிக்கொண்டு முறையிட்டனர்.
அப்போதும், ‘ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்’ என்று அந்த வக்கீல் புலம்புவது காதில் விழுந்தது. ”எங்க இத்தனை வருஷ உழைப்பெல்லாம் வீணாப்போச்சுங்க சார்! எப்புடியாச்சும் கண்டுபுடிங்க சார்!” என்றொரு வக்கீல் நெஞ்சுருக வேண்டிக் கொண்டிருந்தார். ”புடிச்சுர்லாம் விடுங்க,” என்று அவரை சமாதானப்படுத்த முயன்றார் எஸ்பி. போகவே மனம் இல்லாமல் புறப்பட்டனர்.
போகும்போதும் கூட அந்த வக்கீல் என்னைப் பார்த்து, ‘ஹெவி லாஸ், ஹெவி லாஸ்’ என்று கூவிக்கொண்டே போனார். என்னால் அந்த சஸ்பென்ஸை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நேராக எஸ்பியிடம் போனேன்.
”சார்! என்ன ஹெவி லாஸ், ஹெவி லாஸ்னு சொல்லிட்டுப் போறாங்க?” ”அதுவா? ஆமாமா, அது உண்மையாவே ஹெவி லாஸ் தானே!”
”சார், காத்தால இருந்து ஹெவி லாஸ் புராணம் கேட்டாச்சு, விஷயத்தச் சொல்லுங்க சார்”
”சார் கிரிமினல் கேஸ் நடத்துற வக்கீலுங்க சிலர் ஜாமீன் எடுக்குறதுக்காக பர்மனன்ட்டா பத்து பதினைஞ்சு ரேஷன் கார்டு வெச்சுருப்பாங்க. தேவைக்குத் தகுந்த மாரி ரேஷன் கார்ட யூஸ் பண்ணுவாங்க. இந்த நாலு வக்கீலு ஆபீஸ்லயும் சேந்து மொத்தமா 27 ரேஷன் கார்ட எவனே திருடீட்டுப் போயிட்டான். இப்ப கார்டு இல்லீனா, ஜாமீன் எடுக்க முடியாது. பொழப்பு சுத்தமா ஓடாது. கார்டுக்காரனுக்கு மாசமாசம் பணம் தரணும். திருட்டு போயிடுச்சுன்னு சொல்லவும் முடியாது. இவ்வளவு பிரச்னை வரும்னா அப்றம் அது ஹெவி லாஸ் தானே,” என்றார் எஸ்பி.
எனக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது. ஸ்டேஷனை விட்டு புறப்பட்டேன். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து சிரித்தார்.
”வக்கீல் ஆபீஸ்ல என்ன இருக்கப் போகுதுன்னு கேட்டீங்ளே சார்! இப்ப புரிஞ்சுதா என்ன மேட்டர்னு”
”ஆமாமா சார்! ஹெவி லாஸ் தான்,” என்றேன் நானும்.
காவல் நிலையத்தை கடந்து வந்தபோது பாதிக்கப்பட்ட வக்கீல்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். ”எவனோ விஷயம் தெரிஞ்ச ஒர்த்தன் தான் இத செஞ்சிருக்கனும்,” என்றார் ஒருவர். ”ஹெவி லாஸ்! ஹெவி லாஸ்!” என மீண்டும் அதே குரலில், அதே புலம்பல்! ‘ஐயோ பாவம்’ என நினைத்துக்கொண்டேன்.
Posts Tagged ‘police’
ஆஹா என வந்தது பார் பேரிழப்பு!
Posted: 08/06/2014 in கட்டுரைகுறிச்சொற்கள்:lawyers, pds card, police, tamil stories, theft
9
அனுபவம் 5 -புலம்பல் ஆயிரம்
Posted: 09/03/2014 in இதழியல்குறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, இதழியல், cbe, kovai, police, police stories in tamil, theft news
மழையின்றி துளியின்றி, மக்கள் மண்டை காய்ந்து கொண்டிருந்த ஒரு வெயில் காலத்து அதிகாலைப்பொழுதில், எனது டிவிஎஸ் 50 காணாமல் போயிருந்தது.
நாட்டின் மீதும், சக மக்கள் மீதும், எனக்கிருந்த நம்பிக்கைகளில்
முக்கியமான ஒன்று, அன்றுதான் பொய்த்துப் போனது.
‘நம்ம வண்டிய எவன் திருடப்போறான்’ என்ற என் அசாத்திய நம்பிக்கைக்கு, நிறைய காரணங்கள் இருந்தன.
கிழிந்த சீட்டை மறைத்துக் கொண்டிருந்த காகிதங்களும், ஒற்றைப்பெடலும், உடைந்த கண்ணாடியும், ஒரு பக்கமாய் திரும்பிக் கொண்டிருந்த ஹெட்லைட்டும், ஏகமாகவே ஆங்காங்கு இருந்த மேடு பள்ளங்களும், அந்த வண்டியின் அருமை பெருமைகளை அனைவருக்கும் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.
யாராவது அந்த வண்டியுடன் என்னைப் பார்த்தால், ‘சார், வாயிருந்தா அழுதுரும்’ என்பர். ‘கை, கால் இருந்தால் என்ன செய்யுமோ’ என்பேன் நான். அந்தளவுக்கு நான் ஓட்டிக்கொண்டிருந்த வண்டியின் புகழ், அந்த பிராந்தியம்
முழுவதும் பரவியிருந்தது.
‘கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் கவுண்டமணியின் காருடன் ஒப்பிட்டு, எனது வண்டியுடன் என்னையும் சேர்த்து ‘ஓட்டுவது’ நண்பர்களுக்கு வாடிக்கை. இப்படி, என்னை விட என் வண்டி அதிகம் புகழ் பெற்றிருந்த காலகட்டத்தில்தான், அந்த திருட்டு சம்பவம் நடந்து விட்டது.
‘போலீசில் புகார் தரலாமா, வேண்டாமா’ என இரண்டு யோசனை. ”அட, நீங்க வேற! எவனாவுது உங்க வண்டியில போயி கொலை கொள்ளைனு பண்ணித் தொலைச்சான்னா அப்புறம் நீங்கதானே கோர்ட்டு கேசுன்னு அலையனும்… வாங்க, மொதல்ல கம்ளைண்ட் குடுத்துருவோம்,” என்றபடி, வம்படியாக இழுத்துப்போனார், போட்டோக்காரர்.
‘சார், உங்க வண்டி திருட்டுப் போய்டுச்சா…!’ என திரும்பத் திரும்பக் கேட்டார், இன்ஸ்பெக்டர். ‘அந்த வண்டிய திருடுற அளவுக்கு நாட்டுல பசி பஞ்சம் வந்துடுச்சா’ என எடுத்துக் கொடுத்தார், பக்கத்தில் இருந்த எஸ்.ஐ.,
வேறு வேறு வார்த்தைகளில் கேட்டாலும், இருவர் கேள்விக்கும் பொருள் ஒன்றுதான். அப்படி பரிதாப நிலையில் இருக்கிற, யாருமே சீந்த மாட்டார்கள் என்று ஊரும் உலகமும் தீர்க்கமாக நம்புகிற பொருளைக்கூட திருடிச்செல்லும் அளவுக்கு நாட்டில் வறுமை வந்து விட்டதா என்பதே அவர்களது சந்தேகத்தின் அடிப்படை.
குற்றப்பிரிவு ஏட்டையா கொஞ்சம் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசினார். ”வண்டி கெடச்சுரும் கவலப்படாதீங்க சார்.
பாடுபட்டு சம்பாதிச்ச பணம், பத்து பைசான்னாலும் அது நம்மளவிட்டுப் போகாது சார்,” என்றார்.
‘இவராவது ஆறுதலாகப் பேசுகிறாரே’ என்றெண்ணி, நன்றி கூறிப் புறப்பட்டேன்.

அப்போது ஏட்டையா சொன்னார், ”அது, நேத்து அமாவாசை பாத்துக்கிடுங்க. இருட்டுல வண்டிய தள்ளீட்டுப் போய்ட்டானுவ. வெடிஞ்சதும் பாத்தானுவன்னா,
எடுத்த எடத்துலயே கொண்டாந்து நிப்பாட்டீருவானுவ”
எடுத்த எடத்துலயே கொண்டாந்து நிப்பாட்டீருவானுவ”
தொங்கிய முகத்தோடு அலுவலகம் சென்றதும், ஆபீஸ் பையன் அக்கறையுடன் கேட்டான்.
”சார், அக்கா திட்டுனாங்களா”
”யோவ், சம்சாரம் திட்டுனா எவனாது கவலப்படுவானா, அவுரு வண்டி திருட்டுப்போய்டுச்சுய்யா,” என்றார், போட்டோக்காரர்.
”அய்யய்யோ” என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், ‘அன்னிக்கே அந்த பேரிச்சம்பழத்துக்காரன் கேட்டான்’ என்று ஆரம்பித்தான். போட்டோக்காரர் கண் ஜாடை காட்டினாரோ, என்னவோ, அமைதியாகி விட்டான்.
விளம்பரக்காரர் வந்தார், ‘ஏங்க, வண்டி திருட்டுபோயிடுச்சாங்க,
போனாப்போகட்டும். அதைய வெச்சு பேரிச்சம்பழம் தான் வாங்க முடியும்’ என்று ஆறுதல் கூறினார். ஆபீஸ் பையன் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.
போனாப்போகட்டும். அதைய வெச்சு பேரிச்சம்பழம் தான் வாங்க முடியும்’ என்று ஆறுதல் கூறினார். ஆபீஸ் பையன் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தான்.
அடுத்த சில நாட்களில் விஷயம் காட்டுத்தீ போல் ஊரெங்கும் பரவி விட்டது. மூன்றாம் நாள் காலை 6 மணிக்கெல்லாம், எஸ்.பி., போனில் கூப்பிட்டார்.
‘என்ன சார், வண்டி திருட்டு போயிடுச்சுன்னு சொன்னாங்க. நான் ஐ.ஜி., மீட்டிங்ல கூட இதப்பத்தி பேசீ வெச்சுருக்கேன்’ என்று நிறுத்தினார்.
”சார், இதப்போயி ஐ.ஜி., மீட்டிங்ல பேசுனீங்ளா… ஏன் சார் நீங்க வேற,” என்றேன், நான்.

”அட, என்ன இப்புடி சொல்லிட்டிங்க, பாடாவதியா இருந்த உங்க வண்டியக்கூட திருடுறாங்கன்னா, எவனோ ஒர்த்தன் கண்ணுல படறத எல்லாம் திருடுறான்னு அர்த்தம். அதுனால டிஸ்ட்ரிக் முழுக்க பந்தோபஸ்த் ஸ்ட்ராங் பண்ணீருக்கோம்”
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே நாட்கள் கடந்தன. வண்டியில்லாமல் நானும் பெரும்பாடு, குறும்பாடு எல்லாம் பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் மதியவேளையில் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து கடையில் நின்றிருந்தோம். ஒரு லாரி, ஸ்டேஷனுக்கு வந்தது. அதில் இருந்து டூவீலர்களை ஒவ்வொன்றாக போலீசார் இறக்கி உருட்டிச்சென்றனர். கடைசியாக இறக்கிய வண்டியை, இரு போலீஸ்காரர்கள் சேர்ந்து தூக்கிச்செல்வது தெரிந்தது.

போட்டோக்காரர் துள்ளிக்குதித்து ஓடினார்.
”ஏங்க, உங்க வண்டி கெடச்சுருச்சு”
அருகில் சென்றபோது, குற்றப்பிரிவு ஏட்டையா சொன்னார். ”சார், உங்க வண்டி, உள்ளது உள்ளபடி அப்படியே ரெக்கவரி பண்ணீட்டோம் பாருங்க”
சிரித்துக்கொண்டே சொன்னார்.
”உங்க வண்டிய ரெக்கவரி பண்றதுக்காக, நெறய அலஞ்சம்னா
பாத்துக்கிடுங்க. ஒரு வண்டிதானெ போனாப்போகட்டும்னு சொன்னா, திருடனே சொல்றான், ‘அந்த வண்டிய பாக்கவே பாவமா இருந்துச்சு, ஏதோ புத்தியில்லாம தூக்கீட்டமேன்னு சொல்லிட்டாம்ல. அப்புறம் 20 மைல் அலஞ்சுல்ல உங்க
வண்டியப்புடிச்சம்”

‘ஆஹா, நாட்டில் தர்மம் இன்னும் சாகவில்லை’ என நினைத்துக் கொண்டேன்.
அருகில் இருந்த போட்டோக்காரர், போலீஸ் ஏட்டையாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
”சார், உண்மையச் சொல்லுங்க. திருடீட்டுப்போனவன், இந்த வண்டிய ரிப்பேர் சரி பண்றதுக்கு பணம் ஏதாவது கொடுத்து விட்ருக்கனுமே”
அருகில் இருந்த போட்டோக்காரர், போலீஸ் ஏட்டையாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
”சார், உண்மையச் சொல்லுங்க. திருடீட்டுப்போனவன், இந்த வண்டிய ரிப்பேர் சரி பண்றதுக்கு பணம் ஏதாவது கொடுத்து விட்ருக்கனுமே”
0.000000
0.000000