தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!
தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!
கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?
எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?
உப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்
Posted: 17/02/2014 in கவிதைகுறிச்சொற்கள்:Aarumugam, ayyasamy, cbe, coimbatore, kovai, poetry, rain, tamil poetry
மக்கள் படும்பாடு
மழையின்றி பெரும்பாடு!
மாடு கன்று வைத்திருப்போர் நிலையெல்லாம் என்னாகும்?
காடெல்லாம் காய்ந்து போனால்
மான் கூட்டம் எங்கு போகும்?
மழையே மழையே!
உனக்கென்ன கேடு?
மாதம் ஒரு முறை
வா என் வீடு!
காய்ந்து வெடித்த நிலம்
கதறித்தான் அழுதிடுமா?
முப்போகம் விளைந்த பூமி
முனகித்தான் பார்க்கிறதோ?
மண்புழுக்கள்
மடிவது கண்டு
முட்செடியாய்
முளைக்கிறதோ?
கூட்டமாய் தேடி வரும்
கொக்கு குருவிக்கெல்லாம்
கட்டாந்தரை ஆன குளம்
என்ன பதில் சொல்லிடுமோ?
அன்பொழுக அழைத்திருந்தேன்! ஆடியும்தான் பார்த்து விட்டேன்! அத்தனைக்கும் பயனில்லை
அதனால் தான் கேட்கின்றேன்!
மழையே மழையே
உனக்கென்ன கேடு?
மரியாதை கெட்டு விடும்;
மாசிக்குள் பெய்து விடு!