Posts Tagged ‘News’

dir=”ltr”><divவீதிக்கு வீதி போலீசாரையும், பறக்கும் படை அதிகாரிகளையும் நிறுத்தி, வாகன சோதனை நடத்துவது, ஆவணம் இல்லாத பணத்தை பறிமுதல் செய்வது, புடவை, வேட்டி, சட்டை, அம்மன் விளக்கு, கொலுசு, மூக்குத்திகளை பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது , வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பவர்களை எச்சரிப்பது, முடிந்தால் பிடிப்பது என, தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருப்பது எல்லாமே வெட்டி வேலை என்றே தோன்றுகிறது.
ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.

செய்தி சேகரிக்கச் செல்லும்போது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதில் நன்மைகள் பல உண்டு. எப்போதோ வந்த செய்திக்காக, யாராவது சிக்குபவனை உதைக்கக் காத்திருக்கும் வில்லங்கம் வீராசாமிகளால் தொந்தரவு இருக்காது. மறுநாள் ஏடாகூடமாக செய்தி வந்தால்கூட, ஊருக்குள் தாராளமாக, தைரியமாக நடமாட முடியும். போர் அடித்தால் பாதி நிகழ்ச்சியில் எழுந்து வருவதும் சாத்தியமே.
‘நிருபர் இருக்கிறார், பேசுவதும் செய்வதும் பேப்பரில் வரும்’ என்ற எண்ணத்தில் விபரீத முடிவெடுக்கும் ஆசாமிகளிடம் இருந்து கூட்டத்தினரை காப்பாற்றவும் முடியும்.
‘பார்த்துப் பேசி விட்டு செய்தியில் பெயர் குறிப்பிடாமல் இருந்து விட்டான்’ என்ற பழிச்சொல்லில் இருந்து எளிதில் தப்புவதற்கும் வசதியாக இருக்கும்.
அரசியல் கட்சி கூட்டங்களுக்கோ, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கோ செல்லும்போது ஏற்படும் மிகப்பெரிய பிரச்னையே, பெயர் போடுவது தான். பெயர் போடாத நிருபரை பார்த்து, அவர் பரம்பரை மீதே மண் வாரித்தூற்றும் அரசியல்வாதிகள் நாட்டில் பெருகி விட்டார்கள். ‘அவுங்கெல்லாங்குடுக்குறத நாங்குளும் தர்றோம், எங்கு பேரையும் போடுங்கப்பா’ என்று வம்பிழுப்பவர்களும் உண்டு. ‘பார்த்து பேசித் தொலைத்து விட்டோமே’ என்று பரிதாபப்பட்டு பெயரை சேர்த்து விட்டால், எடிட்டோரியலில் கும்மாங்குத்து வாங்க வேண்டியிருக்கும் என்பது தனிக்கதை.

பத்திரிகை நிருபருக்கு மரியாதை செய்கிறோம் பேர்வழி என்று பொன்னாடை போர்த்த மேடைக்கு அழைக்கும் இம்சை, சங்க கூட்டங்களில் அடிக்கடி அரங்கேறும். ‘சாப்பிடாமல் போகக்கூடாது’ என்று வம்படியாய் இழுத்துச்சென்று, நமக்கு ஆகாத, பிடிக்காத உணவுப்பண்டத்தை இலை நிறையப்போட்டு, உண்டு முடிக்கும்படி கொடுமைப்படுத்துவோரும் நாட்டில் இருக்கின்றனர். ‘போட்டோவில் என்னை மட்டும் கட் பண்ணீட்டிங்க’ என்று நமக்கு சம்மந்தம் இல்லாத பேப்பரில் வந்ததை சுட்டிக்காட்டி கண்ணீரும் கம்பலையுமாக புகார் கூறும் கூட்டம் படுத்தும்பாடு இருக்கிறதே… அப்பப்பா!

Uppuma kavithaigal 4

Posted: 30/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!

Uppuma kavithaigal 3

Posted: 30/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , ,

:p பதறுது அமெரிக்கா ;(

பாவம் ஒபாமா
புலம்புறாரு பைத்தியமா!
பதறுது அமெரிக்கா
பரிதவிக்குது அப்பப்பா!
ஊருக்கு உபதேசம்
ஓய்வில்லாம சொல்றாங்க!
அவங்கவுங்க பிரச்னைய
அம்போன்னு விடுறாங்க!
ஊருக்கு இளைச்சவன
அசலூருல தேடுறாங்க…!

Uppuma kavithaigal 2

Posted: 29/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

இனிக்கிறதோ இன்ப தீபாவளி!

சம்பளம், போனஸ், முன்பணம், இனாம் சகலமும் ஆங்கே வாங்கிய பிறகும் சட்டைப்பையில் காசுகள் தேடும்
சங்கடம் தானோ சாபமாய் கூடும்!

விதம் விதமாய் எதிர்பார்த்து வீணாகித்தான் போன
கனவுலக மாந்தர்க்காய்
கனிந்து வந்த விடுமுறையே!

ஒரு நாள் இருந்து
மறுநாள் வராமல்
சனிக்கிழமையில் நீயும்
சலிப்பின்றி வருவதால் தானோ
என் போன்ற பலருக்கும்
இனிக்கிறது, இந்த தீபாவளி!