கொள்ளையோ கொள்ளை!

Posted: 13/01/2014 in கவிதை, கருத்து, இதழியல்
இந்த வருசமும், மெட்ராஸ்ல புக்கு கண்காட்சி ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ பொருட்காட்சிக்கு போற மாதிரி மக்களும் கூட்டங்கூட்டமா போறாங்க!
அஞ்சு லட்சம் தலைப்பு, பத்து லட்சம் தலைப்புன்னு ஆளாளுக்கு பீதி கெளப்புறாங்க. 
‘எல்லாரும் புக்கு நெறய வாங்கணும், வாசிப்பு பழக்கம் அதிகரிக்கணும்’னு அள்ளி விடுறாங்க. இந்தக்கூட்டத்துல எழுத்தாளர்களுக்குள்ள எந்த  வித்தியாசமும் காணோம்.
சங்க எலக்கியம், சமகால எலக்கியம், சாக்கடை எலக்கியம்னு எல்லாமே ஒரே ஜோதில ஐக்கியம் ஆயிடுது. தேவாரம், திருப்புகழ் விக்குற கடையிலயே, எலக்கியம்னு சொல்லி கண்ட கருமத்தையும் விக்குறாங்க. அவங்களப் பொறுத்த வரைக்கும் இது ஒரு ஏவாரம்.
அதுவுமில்லாம கண்காட்சில, புக்கு வெலை தாறுமாறா ஏறிப்போச்சுன்னு ஒரே புகாரா இருக்கு. அட்டைய கொஞ்சம் கெட்டியாவோ, பளபளன்னோ போட்டு 500 ரூவா, 1000 ரூவான்னு தீட்டறாங்க.  இதுல, 2 லட்சம் சேல்ஸ்னு ஒருத்தர் ஸ்டேட்டஸ் வேற.
அதுலயும், இந்த சின்னப்பசங்களுக்கான புக்கெல்லாம் அநியாய வெலை. எப்புடியும் பெத்தவங்க வாங்கித் தொலைப்பாங்கன்னு தானே எண்ணம்!  மொத்தத்துல புக்கு கண்காட்சிங்குறது, ஒரு நூதனமான கொள்ளை.
புக்கு வாங்குறவுங்களுக்கு, அறிவாளிங்குற மெதப்பு தனக்குத்தானே வாரதாலயும், தலைக்கு பின்னால ஆறு இஞ்சி விட்டத்துல, தானே ஒளிவட்டம் கெளம்புறதாலயும்,  பணத்த பறிகொடுத்த யாருமே,   அதப்பத்தி பெருசா எடுத்துக்குறதில்ல. 
மத்த மேட்டர்ல எல்லாம் ஒருத்தர ஒருத்தர் கால் வாரி கவுத்து, மண்ண வாரித்தூத்துற தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைங்களும், அரசியல் விமர்சகர்களும், சர்வதேச சிந்தனையாளர்களும், புக்கு கண்காட்சிய பொறுத்தவரைக்கும் அமுக்கித்தான் வாசிப்பாங்க! 
காரணம், புக்கு ஏவாரம் தான். கண்காட்சிங்குற பேர்ல நடக்குற பகல் கொள்ளைல ஒரு பங்கு இருக்குறது தான் அவங்க அமைதிக்கு முக்கிய காரணம். 
ஆங்கில- தமிழ் அகராதிங்குற பேர்ல நெறய குப்பை இருக்குது. வெவரம் தெரியாம பல நூறு பணம் குடுத்து நெறயப்பேரு குப்பைய வாங்கீட்டுப்போறாங்க. அஞ்சு லட்சம், பத்து லட்சம்னு குவிஞ்சு கெடக்குற குப்பையில நல்ல புக்கு கண்டுபிடிச்சு வாங்குறது அப்பாவிகளுக்கு சாத்தியம் தானா? மக்களே சிந்திச்சுப்பாருங்க.
வானத்துக்கு மேலயும் சரி, கீழயும் சரி எதப்பத்தியும் கருத்து சொல்ற எழுத்தாளர்கள் ஒருத்தர் கூட, இந்தக் கொள்ளையப்பத்தி வாயே தெறக்கலியேங்குறது என்னோட வருத்தம். 
பதிப்பகத்துக்காரன் கோச்சுக்குவானேங்குற பயமா இருக்குமோ? இல்ல, ராயல்டி வாங்குறதுல  பிரச்னை வந்துரும்னு கவலையாருக்குமோ? 
(அப்புறம், புக்கு வெலைக்கு லேபர் காஸ்ட் எல்லாம் காரணம் சொல்றாங்க. எழுத மட்டும் தெரிஞ்சாலே  எழுத்தாளர்னா புக்கு வெல ஏறத்தான செய்யும்? 
அந்தக்காலத்துல நடிக்க வாரவுங்க பாட்டு, டேன்ஸ், கம்புச்சண்டை எல்லாம் கத்துக்கிட்டு வந்தாப்புல, எழுதுறவுங்களும், இன்டிசைன், கோரல்,  போட்டோஷாப் குவார்க் எல்லாம் தெரிஞ்சிருக்கணும். அட்டை முதல் பக்கம் வரைக்கும் அவங்களே ரெடி பண்ணனும். அப்பத்தான் லேபர் காஸ்ட் கொறயும்)  
‘மக்கள் கூட்டம் கூட்டமா வரத்தான செய்யுறாங்க, படிச்சுப்பாத்து தான வாங்குறாங்க’ அப்டின்னு யாராச்சும் கேக்கலாம்! 
‘அய்யா, மக்கள் கூட்டத்துக்கும், தரத்துக்கும் சம்மந்தமே இல்ல.  நாட்டுல நடுத்தர வர்க்கம் பெருகிப்போச்சு. பொழுதான வீட்டுல இருந்து கெளம்பிப்போகணும், பயன்படுதோ இல்லையோ, எதையாச்சும் வாங்கணும்னு எண்ணம் கொண்டவங்கஅதிகமாயிட்டாங்க.
அவுங்க அன்னாடும் கூட, கண்காட்சிக்கு வருவாங்க. புக்கும் வாங்குவாங்க. அதெல்லாம், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்ககிட்ட பெரும பேச மட்டும் தான்! படிப்பாங்களான்னா, சந்தேகம் தான்! 
இப்புடிப்பட்ட வாசகர்களோட வாங்கும் தெறமைய குறி வெச்சுத்தான் புக்கு வெலய தாறுமாறா ஏத்தி ஒவ்வொரு வருசமும் கன கச்சிதமா கூட்டுக்கொள்ளை நடக்குது.
இதுனால பாதிக்கப்படுறது யார்னு பாத்தா, இலக்கிய ஆர்வம் இருக்குற, ஆன்மிகத்துல ஈடுபாடு இருக்குறவுங்க, அகராதி வாங்கியே தீரணும்னு அடம் புடிக்குற பசங்களோட அப்பா, அம்மா இவுங்க தான்! வேற வழியில்லாம பொலம்பிட்டே புக்கு வாங்கீட்டு போறாங்க. 
வெளிநாட்டுல இருந்தும் கூட, எழுத்தாளர்களும் புக் வாங்குறவுங்களும், வாராங்களாம்! தாராளாமா வரட்டும். இவுங்களும் தாராளமா விக்கட்டும். 
ஆனா, மொழிய வளர்க்குறோம், அறிவக் குடுக்கறோம், ஆளாக்குறோம் அழகுபாக்குறோம்னு பீத்திக்குறத ஏத்துக்கவே முடியாது. இவுங்க செய்யுறது வியாபாரம், பொழுதுபோக்கு, கொள்ளையோ கொள்ளை! அதுல என்ன பெரும வேண்டிக்கெடக்குதுங்குறேன்?
 
***
நண்பர்களே, புத்தக கண்காட்சி தொடர்பான மாற்றுக்கருத்து இது. எதிர்க்கருத்துக்களையும் மனமுவந்து வரவேற்கிறேன். நன்றி! 
 
 
பின்னூட்டங்கள்
 1. சென்னைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பிறகு வந்து தெரிந்து கொள்கிறேன்…!

  Like

 2. chitrasundars blog சொல்கிறார்:

  பயனடைந்தவர்களின் எதிர்க்கருத்துகளைக் காண வெயிட்டிங் !!

  Like

 3. ootynews சொல்கிறார்:

  புத்தக கண்காட்சி காசு பார்க்க மட்டும்தான்… ஏன் எத்தனையோ புத்தக கடைகள், பதிப்பகங்கள் இருக்கும் போது அங்கு போ ய் வாங்கலாமே. கண்காட்சிக்கு ஆகும் செலவை புத்தகங்களுக்கு தள்ளுபடியாக தரலாமே…..

  Like

 4. vmloganathan சொல்கிறார்:

  எனக்கு தெரிந்து இதில் உயிர்மை பதிப்பகம்( மனுஷபுத்திரன்) மிக முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று எண்ணுகிறேன்..

  Like

 5. yarlpavanan சொல்கிறார்:

  தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  Liked by 1 person

 6. இதுபோன்ற நிகழ்வின்போதாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s