சபாஷ் போடுது நாய்க்குட்டி!

Posted: 15/12/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , ,

காக்கை குருவிக்கெல்லாம்
கவிதை எழுதுகிறாய்!
கடைக்குட்டி பாப்பாவுக்கும்; எனை
கட்டி வைக்கும் அக்காவுக்கும்
கவிதை எழுதி விட்டாய்!
கடும் குளிரில் வெறும் தரையில்
காவல் இருக்கின்றேன்;
கண்மூடி போகின்றாய்!
வாலை ஆட்டிக்கொண்டே
வழிமறித்தது நாய்க்குட்டி
வருத்தமாய் இருப்பது போல்
குரைத்தது காலைக் கட்டி
‘உனக்கும் ஒரு கவிதை
எழுதித்தான் விடுகின்றேன்’
என்றே தான் சொல்லி
தப்பித்து நான் வந்தேன்
‘காலம் முழுவதும் காவல்காரன்’
‘காப்பி, டீ கேட்காத வேலைக்காரன்’ ‘சம்பளம் இல்லை; போனஸ் இல்லை சட்டம் பேசாத சாகசக்காரன்’
சிரிப்புடனே நான்
சொல்லக்கேட்டதும்
‘சரிதான், சரிதான்’ என்றபடி
சபாஷ் போட்டது நாய்க்குட்டி!

பின்னூட்டங்கள்
  1. அருமையான கவிதை… ரசித்தேன்…

    வாழ்த்துக்கள்…

    Like

  2. நாய்க்கும் ஒரு சபாஷ்!
    நாய் கவிதை எழுதிய கவிஞருக்கும் ஒரு சபாஷ்!!

    Like

  3. chitrasundar5 சொல்கிறார்:

    ஆமாங்க, நாய்க்குட்டி கேட்டதும் சரிதானே ! வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க, நல்லாருக்குங்க கவிதை. வாழ்த்துகள்.

    புதிய இடுகையை எழுதும்போது ‘தலைப்பை உள்ளிடவும்’ என்ற இடத்தில் கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்தால் கவிதைக்கானத் தலைப்பு வந்துவிடும். முயற்சி பண்ணி பாருங்க.

    Like

    • aarumugamayyasamy சொல்கிறார்:

      நன்றி சித்ரா சுந்தர் மேடம். நீங்கள் வலைச்சரத்தில் கொடுத்த அறிமுகம் பயனுள்ளதாக இருந்தது. புதிய பதிவர்களை அறிந்து ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

      Like

பின்னூட்டமொன்றை இடுக