நவம்பர், 2013 க்கான தொகுப்பு

Uppuma kavithaigal 4

Posted: 30/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

என் வீட்டு முற்றத்தில்
எதையோ தேடியது சிட்டுக்குருவி!
அழுது திரிந்தபடி
அங்குமிங்கும் ஓடியது
‘அய்யோ அய்யோ’ என்றபடி
அரற்றிப் புலம்பியது
கூடு கட்ட இடம் தேடியதோ?
குஞ்சுக்கு இரை தேடியதோ? முல்லைக்கொடி காணோம்!
முயல் ஆடிய கூண்டும் காணோம்!
ஆடு மேய்ந்த வெளியெல்லாம் அம்போன்னு கிடக்குறதே!
ஆட்டாங்கல் தண்ணியெல்லாம்
அப்படியே நிக்குறதே!
குடிக்கவே யாருமில்லையோ? குருவிக்கூட்டம் போனதெங்கே?
புல்வெளி வாசலிலே
புழு பூச்சி தின்ற குருவி
காரை வாசல் கண்டு
கத்திக்கதறியது!
‘குருவிகளே குருவிகளே’
குரல் கொடுத்துக் கூப்பிட்டது!
வருவார் யாருமில்லை
வேதனையில் நின்ற குருவி விருட்டெனவே பறந்தது
சாபம் கீபம் விட்டுடுமோ?
சந்தேகம் வந்ததிப்போ
குருவிக்கு கலரடிச்சு
காதல் பேர்ல விக்குறததும்
கறிக்கடைக்கு வறுவலுக்கு
காசுக்கு விக்குறதும்
ரொம்பவே தப்புத் தப்பு!
திருந்துங்க மக்கு மக்கா!

Uppuma kavithaigal 3

Posted: 30/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, , ,

:p பதறுது அமெரிக்கா ;(

பாவம் ஒபாமா
புலம்புறாரு பைத்தியமா!
பதறுது அமெரிக்கா
பரிதவிக்குது அப்பப்பா!
ஊருக்கு உபதேசம்
ஓய்வில்லாம சொல்றாங்க!
அவங்கவுங்க பிரச்னைய
அம்போன்னு விடுறாங்க!
ஊருக்கு இளைச்சவன
அசலூருல தேடுறாங்க…!

Uppuma kavithaigal 2

Posted: 29/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

இனிக்கிறதோ இன்ப தீபாவளி!

சம்பளம், போனஸ், முன்பணம், இனாம் சகலமும் ஆங்கே வாங்கிய பிறகும் சட்டைப்பையில் காசுகள் தேடும்
சங்கடம் தானோ சாபமாய் கூடும்!

விதம் விதமாய் எதிர்பார்த்து வீணாகித்தான் போன
கனவுலக மாந்தர்க்காய்
கனிந்து வந்த விடுமுறையே!

ஒரு நாள் இருந்து
மறுநாள் வராமல்
சனிக்கிழமையில் நீயும்
சலிப்பின்றி வருவதால் தானோ
என் போன்ற பலருக்கும்
இனிக்கிறது, இந்த தீபாவளி!

Uppuma kavithaigal

Posted: 24/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

உப்புமா (சுய) விமர்சனம்-1

‘முகநூல்’ புண்ணியத்தில்
முழு நேரமாய் கவிதை கிண்டும்
‘உப்புமா’ கவிஞர்கள்
இப்பவே பல கோடி!

தத்தென்றும் பித்தென்றும்
தரிகிடத்தோம் என்றும்
தாம் என்றும் தூம் என்றும்
தர்மத்துக்கு எழுதுகின்றார்!

கத்தையாய் எழுதியெழுதி
காகிதத்தை கறுப்பாக்கி
புத்தகமாய் அச்சிட்டால்
பத்து பைசாவும் தேறாது!

விற்கவும் ஆளில்லை
வாங்கவும் வாய்ப்பில்லை
விளங்கியதால் தான் இந்த
விபரீத முடிவெல்லாம்!