நட்டுக்கும், கொஞ்சம் நாட்டுக்கும்…!

Posted: 07/12/2014 in நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, ,

‘நட்டு சரியாக இருந்தால், நட்டம் வராது’ என்பது முதுமொழி. நல்ல நட்டுக்கள், நண்பர்களைப் போன்றவை; அவை, நம்மை நட்டாற்றில் விடுவதில்லை. நாட்டுக்கும் சரி, வீட்டுக்கும் சரி, நட்டுக்கள் மிக அவசியமானவை; அவற்றின்மீது நாட்டமின்றி இருப்பது, நன்மை பயக்காதென்பதை நாட்டோர் நன்றாகவே அறிவர்.
நட்டுக்கும், நாட்டுக்கும் நடுவிலே நிற்பது, நல்லதொரு கால் மட்டும்தானே!
‘நாட்’ என்பதை ‘முடிச்சு’ என்பதும் நாட்டோர் வழக்கமே. நட்டு கழன்றுபோன காரணத்தால், பல ‘நாட்’டுகள் கழன்றுபோனது வரலாறு. நட்டுக்களில் ஒரிஜினல்கள் இருக்கின்றன; போலிகளும் பல உண்டு. அதுபோலவே, ‘நாட்’டுகளிலும் நடப்பதை நாடறியும். ‘நட்’டில் ஆரம்பித்து ‘நாட்’ வரை வந்தவர்கள் பலர் உண்டு. ‘நட்’டில் தொடங்கி, ‘நட்’டில் நடந்து, ‘நட்’டாற்றில் மூழ்கியவர்களும் பலருண்டு. ‘நாட்’டுப்போட்டால், நட்டு சரியாகும் என்று, கால் கட்டுப்போட்டது அந்தக்காலம். நன்றாக இருந்த நட்டு போல்ட்டெல்லாம், ‘நாட்’டின் விளைவால், நாசமாய்ப் போவது, இந்தக்காலம்.
சிலபல இயந்திரங்களைப்போல், மனிதர்கள் அணிந்திருக்கும் நட்டுக்கள் வெளியில் தெரிவதில்லை. அப்படித் தெரிவதாயிருந்தால், இறுகும் ‘நாட்’டுகள் எத்தனையிருக்கும்; இளகும் ‘நாட்’டுகள் எத்தனையிருக்கும் என, இரவு முழுவதும் எண்ணிப்பார்த்தேன். நமக்கே கழன்றுவிடும் போலிருந்த காரணத்தால், நட்டு ஆராய்ச்சியை, அப்படியே நிறுத்திக் கொண்டேன்.

‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று, சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. ஒரு சில மாதங்கள் வங்கி இருப்பில் பணம் இல்லையென்றாலும், வரவு செலவு இல்லையென்றாலும், அபராதம் விதிக்கக்கூடாது என்பதே ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையின் சாராம்சம்.
இந்த சுற்றறிக்கையெல்லாம், தனியார் வங்கிகளுக்கு தென்பன்படுவதில்லை போலிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், குறைந்தபட்ச இருப்பு, சேமிப்புக் கணக்கென்றால், பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும். மாதாந்திர சராசரியில் தொகை குறைந்திருந்தால், 270 ரூபாய், நமது கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம், குறுஞ்செய்தி கூட அனுப்புவதில்லை. ஆக, நம் கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்ட விவரமே, நமக்குத்தெரிவதில்லை; மாதாந்திர அறிக்கை வரும்போதுதான் தெரியும். இது ஒரு வகையில் நூதன கொள்ளை.
விசாரித்தால், ‘உங்களுக்கு ஏ.டி.எம்., கார்டு, காசோலை புத்தகம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என்று ஏகப்பட்ட வசதிகளை கொடுத்திருக்கிறோம்’ என்று விளங்காத விளக்கம் வேறு! ரிசர்வ் வங்கிகூட, தமிழ் வாத்தியார், கோவில் குருக்கள் போன்று, தயிர் சாத வகையறாக்களைத்தான் போட்டுத்தாக்கும் போலிருக்கிறது!

பின்னூட்டங்கள்
 1. Bagawanjee KA சொல்கிறார்:

  புது atm கார்டு வேண்டுமென்று SBI வங்கியில் கேட்டபோது ,ஒரு பைசா கூட செலவில்லாமல் கிரெடிட் கார்டு தருகிறோம் என்று தலையில் கட்டினார்கள் ,கார்டு வந்தது ,வருடா வருடம் ஐந்நூறு ரூபாய் கட்ட வேண்டுமென்று …வந்த கார்டை பாஸ் வேர்ட் போட்டு திறக்கக் கூட இல்லை ..இந்த வருடக் கட்டணம் என்று ஐந்நூறைப் பிடித்து விட்டார்கள் ..பைசா செலவில்லை என்று சொன்னவரை எங்கே போய்
  தேடினாலும் கிடைக்க வில்லை,பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் அவுட் சோர்சிங் ஆட்களை வங்கியில் உட்கார வைப்பதை ரிசர்வ் வங்கி தடுக்க வேண்டும் !

  Like

  • ஐயா, ரிசர்வ் வங்கி, பல் இல்லாத பாம்பு போன்றது. அது கடித்தாலும் கடிக்கும் என்று நம்மைப்போன்ற ஏமாளிகள்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி உத்தரவுகளுக்கு பயப்படுவதில்லை. எஸ்.பி.ஐ., போன்ற பண பலம் பொருந்திய அரசு வங்கிகளின் தலைவர்களுக்கு இருக்கும் மரியாதையில் பாதி கூட, ரிசர்வ் வங்கி தலைவருக்கு கிடையாது. அப்புறம் எப்படி, அவரது உத்தரவுக்கு மரியாதை இருக்கும்?

   Like

 2. chitrasundar சொல்கிறார்:

  நல்லவேளை நட்டு, நாட்டு பற்றி இத்துடன் முடித்துக்கொண்டீர்கள். இல்லையென்றால் !

  தனியார் வங்கி மட்டுமில்லீங்க, சென்ற வருடம் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் மிகுந்த கசப்பு ஏற்பட்டது. அந்த மேனேஜரிடம் இன்ஸ்யூரன்ஸ் எடுக்கவில்லை என்பதால் என் டெபாசிட்டிலிருந்து லோன் எடுத்ததை அவர்களிடமிருந்து லோன் வாங்கியதாக மாற்றி வட்டியைக் கட்ட வைத்தனர். அதைப்பற்றிக் கேட்டதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வைத்தனர்.

  Like

  • வாருங்கள் மேடம். பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு நட்டு கழன்று விட்டதாக இணையத்தில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இந்த நட்டு ஆராய்ச்சிக்கு காரணம்.
   *
   எல்லா அரசு, கூட்டுறவு வங்கிகளிலும் இதேநிலைதான் மேடம். நமது டிபாசிட்டில் இருந்து பணம் எடுத்தால், அதை கடனாக கருதி, நமக்குத்தருவதை காட்டிலும் கூடுதலாக இரண்டு சதவீதம் வட்டி வசூலிப்பதுதான் நடைமுறையாம். என்ன ஒரு வில்லத்தனம்?

   Like

 3. karanthaijayakumar சொல்கிறார்:

  வங்கிகள் எல்லாம் சேவை மனப்பான்மையில் இருந்து
  வணிக மனப்பான்மைக்கு மாறி காலங்கள் பல கடந்து விட்டது

  Like

  • ஆம் ஐயா. கொள்ளையர்கள் அதிகரித்து விட்டனர். வங்கிகளில் வணிகத்தைப் பெருக்குகிறோம் பேர்வழி என்று, அவர்கள் அடிக்கும் நூதன கொள்ளையில் அப்பாவிகள் சிக்கி சீரழிவதும் அதிகரித்து விட்டது.

   Like

 4. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி – கொள்ளை அடிப்பதில் முதலிடம் – எனது அனுபவத்தில்…!

  Like

 5. B Jambulingam சொல்கிறார்:

  வணிக நோக்கம் என்பது பரவலாகிவிட்ட நிலையில் அனைத்துத் துறைகளிலும் இவ்வாறான நிலையைக் காணமுடிகிறது.

  Like

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  Like

 7. ரூபன் சொல்கிறார்:

  வணக்கம்
  யாவரும் அறிய வேண்டிய விடயத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s