குஷ்புவும், தமிழர்களும்!

Posted: 30/11/2014 in அரசியல், தமிழகம், நையாண்டி
குறிச்சொற்கள்:, , ,

indexஇவ்வளவு காலமாக, குஷ்பு இல்லாமல் கலகலத்துப்போயிருந்த தமிழக அரசியல் களம், அவரது மீள்வருகையால் களைகட்டியிருக்கிறது. அது சரி, எத்தனை நாளைக்குத்தான் டிவி விவாதங்களில், மனுஷ்யபுத்திரன்களையும், கோபண்ணாக்களையும், ஞானசேகரன்களையும், ஆவடி குமார்களையும் சகித்துக் கொண்டிருப்பது? அந்த வகையில், அவரது வருகை, மெச்சத்தக்கதே!

கோவில் கட்டிக் கொண்டாடிய தமிழர்களுக்கு எதுனாச்சும் சேவையாற்ற வேண்டிய கடமை, தனக்கு இன்னும் நிறையவே இருப்பதாக குஷ்பு நினைப்பதில் தவறேதும் இல்லை. இப்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை. நாயக வேடம் போடும் நடிகர்களைப்போல், ரசிகர்களை ஏமாற்றிப் பிழைப்பதுமில்லை; மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக்கொண்டு, அதிகாரம் மிகுந்திருக்கும் அரசியல் கட்சியினருக்கு கூழைக்கும்பிடு போடுவதுமில்லை. ஆகவே, குஷ்பு, மீண்டும் அரசியல் களம் இறங்குவது வரவேற்கத்தக்கதே.
அவர் தி.மு.க.,வுக்குப் போனார். அங்கே பிரச்னை. என்ன ஏதென்று நமக்குத்தெரியாது. அவரும், ‘சொல்ல மாட்டேன்’ என்கிறார். இப்போது, ‘வீதி வீதியாகப் போய், காங்கிரஸை பலப்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார். தாராளமாக செய்ய வேண்டியதுதான்.
ஆனால், அவர் தமிழில் பேசாமல் பார்த்துக் கொள்வதற்கு இளங்கோவன்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம், ‘காங்கிரஸை விட பா.ஜ.,தான் அதிக ஊழல் செய்துள்ளது’ என்று குஷ்பு பேசித் தொலைத்துவிட்டால், எதிர்கோஷ்டிக்காரர்கள், இளங்கோவன் மேல் பெட்டிசன் போட்டுவிடுவர்; அவர் பதவிக்கே ஆபத்தாகி விடும்!
எனக்கென்னவோ, குஷ்புவின் மீள்வருகையில் உள்நோக்கம் ஏதோ இருக்கும்போலத் தெரிகிறது. தன்னை விளக்குமாற்றிலும், செருப்பிலும் அடிக்க முற்பட்ட தமிழர்களுக்கு, பாடம் கற்பிக்கும் அவரது திட்டம், அரசியலில் ஒதுங்கி இருந்தால் நிறைவேறாது; கட்சியில் சேர்ந்து, ஊர் ஊராகச் சென்று மேடையேறியும், வேனில் இருந்தபடியும், கலவை சாதம்போல் தமிழ் பேசி, தமிழர்களை ஓட ஓட விரட்டுவது அவரது சபதமாக இருக்கவும்கூடும். ‘அப்படியொரு சூழ்ச்சிக்கு, இளங்கோவனும், சோனியாவும் பலியாகி விட்டார்களோ’ என்று எண்ணவும் தோன்றுகிறது!

பின்னூட்டங்கள்
 1. bandhu சொல்கிறார்:

  என்னவோ இருப்பவர்கள் எல்லோரும் உருப்படியானவர்கள் மாதிரியும் குஷ்பு வந்து நம்மை பழி வாங்கப் போவதாகவும்.. போங்க சார்.. இருக்கற குட்டையில் இன்னொரு எருமை.. அவ்வளவுதானே!

  Like

 2. என்னமோ போங்க…!

  Like

 3. karanthaijayakumar சொல்கிறார்:

  திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களின் பதிலையேச் சொல்லத் தோன்றுகிறது
  என்னமோ போங்க

  Like

 4. தி.தமிழ் இளங்கோ சொல்கிறார்:

  உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். தேர்தல் நெருங்க, நெருங்க , ஒவ்வொரு கட்சியிலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் அடிக்கடி அதிகம் நடக்கும்.

  Like

 5. chollukireen சொல்கிறார்:

  நக்ஷத்திர அந்தஸ்த்துக்குக் திரும்பவும் காங்கிரஸ் உயரவேண்டாமா.? நக்ஷத்திரங்களாகத் தேடிப்பிடிக்கிரார்கள். வானத்தில் பிரகாசிக்கட்டும்.. அன்புடன்

  Like

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s