காத்திருக்கும் கடைச்சரக்கு!

Posted: 03/11/2014 in அரசியல், தமிழகம்
குறிச்சொற்கள்:, , , ,

இருப்பதில் சிறந்தவழி இதுவேயென்று, அரைமனது, கால் மனதுடன் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்ட அரசியல் கட்சிகள், கொண்டாட்ட மனநிலையில் இருப்பதற்கு, காரணம் நிறையவே இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் வந்து விட்டன.
கேம்பஸ் இன்டர்வியூவில், இரண்டு மூன்று நிறுவனங்களின் அப்பாயின்மெண்ட் ஆர்டர் பெற்றுவிட்டு, எதில் சேருவதென்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மாணவர்களைப் போல், இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள், விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லிக்காய் மூட்டை போலிருந்த தமிழக பா.ஜ., கூட்டணி, இப்போது சந்தையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தே.மு.தி.க.,-ம.தி.மு.க.,-பா.ம.க., ஆகியவை நல்ல வியாபாரியை எதிர்பார்த்து நிற்கின்றன.
சந்தைக்கு இன்னும் கொஞ்சம் சரக்கு வரக்கூடும் போலிருக்கிறது. இருக்கும் சரக்குகளுக்கு, தி.மு.க., முதல் விலையைக் கூறி விட்டது. அவசரப்பட்டு விலைபோக சரக்குகள் தயாரில்லை.
தமிழக காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை பிளவுபடுகிறது. குட்டிகளை விட்டு குளத்தின் ஆழம் பார்க்கும் குரங்குகளை எதிர்கொள்ள, ஓரணியில் இருந்த வாசனும், இளங்கோவனும், நேருக்கு நேர் மோதும் சூழல்.
பாவம் இளங்கோவன்! தலைக்கு மேல் வெள்ளம்போனபிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. முந்தைய முறையைப்போல் அல்லாமல், இப்போது அவரிடம் சத்தியமூர்த்தி பவன் இருக்கிறது; காங்கிரஸ் மைதானமும் இருக்கிறது; கட்சியும் பணம் தரக்கூடும். ஆகவே, வீடுகளை விற்கும் அவசியம் அவருக்கு இம்முறை வர வாய்ப்பில்லை.
தன்னை கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யாமல் விட்ட கோபத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தை, ‘கோமாளின் கூட்டம்’ என்றார், மொகிந்தர் அமர்நாத். இன்றோ, நாளையோ வாசனும் அப்படிச் சொல்லக்கூடும்.
பதவி, பணம் இழந்து, மானம் இழந்து, தந்தைக்கிருந்த மரியாதையும் இழந்து நிற்கும் வாசன், மிஞ்சியிருக்கும் தொண்டர்களையும், ஜால்ராக்களையும், கரையேற்றி விடுவாரா, கால ஓட்டத்தில், காங்கிரஸ் வெள்ளத்தில் கரைந்து விடுவாரா என்பது, போகப் போகத்தான் தெரியும்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    என்னதான் நடக்கப் போகிறது என்று பார்ப்போம் நண்பரே

    Like

    • bagawanjee சொல்கிறார்:

      ஆட்சியில் இருக்கும்வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ,இப்போது மீண்டும் த மா க என்கிறார் ,போணியாகவில்லை என்றால் காங்கிரஸ் ஜோதியில் கலந்து விடுவார் மக்கள் யாரும் இனிமேலும் இவரிடம் ஏமாறத் தயாராயில்லை என்றுதான் படுகிறது !

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s