ஆடு அரைப்பணம்; மேய்ப்புக்கூலி முக்கால் பணம்!

Posted: 11/10/2014 in அனுபவம், மொக்கை
குறிச்சொற்கள்:, ,

எனது டூவீலர் திருட்டுப் போய் திரும்பக்கிடைத்த வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமே! அதன்பிறகு நடந்த சம்பவம் எல்லோரும் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அந்த மொபட்டின் அதிகபட்ச மார்க்கெட் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். அதை திருடனிடம் இருந்து ‘ரெக்கவரி’ செய்த போலீசார், ‘சார், எப்.ஐ.ஆர்., போட்டு விடுவோமே’ என்றனர். விஷயம் தெரியாத நானும், ‘சரி போடுங்கள்’ என்று கூறி விட்டேன்.
கடைசியில்தான் தெரிந்தது, ‘எப்.ஐ.ஆர்., போட்டு விட்டால், கோர்ட் மூலம் தான் வண்டியை எடுக்க முடியும்’ என்பது. ‘சரி, கோர்ட்டுக்கு போய் எடுத்து விட்டால் போகிறது’ என்று முடிவுக்கும் வந்து விட்டேன். அங்கே வக்கீல் மூலம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால்தான், வண்டியை தருவார்களாம்.
‘என்னடா இது, தலைவலியாய் இருக்கிறதே’ என்று எண்ணிக்கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்தேன். குற்றப்பிரிவு போலீஸ்காரர் சொன்னார். ‘சார், நமக்குன்னு ஒரு வக்கீல் இருக்கார், அவரப்போய் பாருங்க. ஏற்பாடு செய்வார்’ என்றார். நானும் அவரைப்போய் பார்த்தேன். அவர், ‘பீஸ் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்’ என்றார். ‘வண்டியின் மதிப்பே இரண்டாயிரம் தான் இருக்கும். அதை எடுப்பதற்கு இரண்டாயிரத்து ஐநூறு செலவு செய்வதெல்லாம் டூ மச்’ என்றேன். வக்கீல் உதட்டைப்பிதுக்கி விட்டார். அப்புறம் அங்கு வேலையில்லை.
‘சார் எப்.ஐ.ஆர்., போட்டதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது. உங்கள் வண்டியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைத்து விட்டோம். அதை வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் பாடு’ என்றார், போலீஸ்காரர். எனக்கு ஆத்திரம் பொங்கியது.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். வேறு ஒரு வக்கீலிடம் அழைத்துப் போனார், நண்பர். விஷயத்தை புரிந்து கொண்ட வக்கீல், ‘சார், கோர்ட்டுல மாஜிஸ்திரேட் வரும்போது, யார் வேண்டுமானாலும் மனு தரலாம். நீங்கள் உங்கள் வண்டி வேண்டுமென்று, ஒரு மனு தாக்கல் செய்யுங்கள். மாஜிஸ்திரேட் ஒப்புக்கொள்வார்’ என்றார். அதற்குரிய ஆவணத்தையும் தயார் செய்து கொடுத்தார். ‘நான் உதவியது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்றும் கூறி விட்டார். இப்படி செய்வது தெரிந்தால், சக வக்கீல்கள் சண்டைக்கு வருவர் என்பது அவரது கவலை.
சரியென்று, நானும் அவர் தயார் செய்து கொடுத்த மனுவை, மாஜிஸ்திரேட் வரும்போது காத்திருந்து கொடுத்தேன். அவர் வண்டியைக் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இரண்டு. போலீஸ்காரர்கள் எதைச்செய்தாலும், அதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கும் என்பது ஒன்று. ஆகவே அவர்கள் எதைச்சொன்னாலும், அதற்கு எதிரான செயல்தான் நமக்கு நன்மை தரும் என்பது மற்றொன்று.

பின்னூட்டங்கள்
  1. Bagawanjee KA சொல்கிறார்:

    உங்கள் அனுபவம் எங்களுக்கும் ஒரு பாடம் !

    Like

    • வாருங்கள் ஐயா. திருடன் ‘அடித்துக்கொண்டு’ போனால், அவனுக்கு மட்டுமே லாபம். அதை போலீஸ் ரெக்கவரி செய்து விட்டால், குறைந்தது ஐந்தாறு பேருக்காவது பயன் கிடைத்து விடுகிறது; வாகன உரிமையாளருக்கு கிடைப்பதென்னவோ பொருள் நஷ்டமும், விலை மதிப்பில்லா மன உளைச்சலும்தான். நான் குறிப்பிட்ட இரண்டாயிரத்து ஐநூறு கட்டணம், அந்தளவுக்கு பங்கு பிரிக்கப்படுகிறது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s