மொபைல் பயணங்களில்…!  

Posted: 29/06/2014 in கட்டுரை
குறிச்சொற்கள்:, , ,

 

பயணங்கள் சுவாரஸ்யம் மிகுந்தவை. அதுவும், தனிமை இணைந்திருக்கும் பயணங்கள், மனதை வருடும் அற்புதத்தருணங்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, வழியெங்கும் மனிதர்களையும், மலைகளையும், மரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்லும் பயணங்கள் தரும் அனுபவம், குதூகலமானது.
அப்படியெல்லாம் ஆழ்ந்து அனுபவித்த காலம், ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாகவே சமீபத்திய பயணங்கள் எனக்கு உணர்த்துகின்றன. காரணம், மொபைல் போன். பயணிக்கும் அனைவரும், ஊர், உறவுகளுடன் தொடர்பில் இணைந்திருக்க உதவும் மொபைல் போன்கள், தனிமை விரும்பும் பயணிகளை இம்சிப்பதாகவே மாறி விட்டன.
டிரைவர், கண்டக்டருடன் 50 பேர் பயணிக்கும் ஒரு அரசு பஸ்சில், சுமார் 45 பேராவது கையில் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள். பாதிப்பேர் பேசிக்கொண்டும், மீதிப்பேர் அதில் விளையாடிக்கொண்டும் பயணிக்கின்றனர். விளையாடுபவர்களால் யாருக்கும் இம்சையில்லை. பேசிக் கொண்டே செல்பவர்களில் பாதிப்பேர், கிசு கிசு குரலில் ரகசியம் பேசுவர். அவர்களையும் விட்டு விடலாம்.
மற்றவர்கள் தான், பிரச்னைக்குரிய வகையினர். தண்டோரா போடாத குறையாக பேசுவது இவர்கள் வழக்கம்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்காமல் பேசிக்கொள்ளும் கலையை இந்தியர்களில் பல பேர் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், கற்றுக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது.
‛கேட்பவர்களுக்கு காது கிழிந்தாலும் பரவாயில்லை’ என்று, தொண்டை கிழியப் பேசும் இக்கூட்டம், படுத்தும்பாடு பெரும்பாடு! இவர்களைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். போன் ஸ்பீக்கரில் பாட்டு போட்டு உயிரை எடுக்கும் கூட்டம் செய்யும் கொடுமை இருக்கிறதே! இவர்களையெல்லாம், குண்டர் சட்டத்தில் போட்டாலும் தகும்.
முன் சீட்டில் இருப்பவர் அஜீத் பாட்டு போட்டால், பின் சீட்டில் இருப்பவர் விஜய் பாட்டு போட்டு விடுவார். இப்படி பஸ்சுக்குள் ஐந்தாறு பேர், ஸ்பீக்கரில் பாட்டு ஒலிபரப்பியபடியே உற்சாகப் பொங்கல் பொங்கியபடி பயணிப்பர். இந்த அழகில், எங்கேயிருக்கிறது தனிமை?

……………..

முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் பற்றிய நகைச்சுவை ஒன்றுண்டு. எதிர்க்கட்சி எம்.பி., ஒருவர், உரத்த குரலில் போன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு எரிச்சலுற்ற சர்ச்சில், ‛அவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்று கேட்டாராம். அருகில் இருந்தவர், ‛அவர் ஸ்காட்லாந்தில் இருப்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்’ என்றாராம். ‛சரி பேசட்டும், போனை பயன்படுத்த வேண்டியது தானே’ என்றாராம், சர்ச்சில். நம்மாட்கள் பலர், இத்தகைய நக்கலுக்கு பாத்திரமானவர்களே.

பின்னூட்டங்கள்
 1. சிரமம் தான்… உண்மை…

  Like

 2. karanthaijayakumar சொல்கிறார்:

  நண்பரே தாங்கள் சொல்லும் கொடுமையை பல முறை அனுபவித்திருக்கிறேன்

  Like

  • வாருங்கள் ஐயா. பஸ்சில், ரயிலில் பயணிப்பவர்கள்பாடு, போன் பேசுவோர், பாட்டு ஒலிபரப்புவோரால் பெரும் திண்டாட்டம் ஆகி விட்டது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ஐயா

   Like

 3. chitrasundar சொல்கிறார்:

  அப்படின்னா காது வலியுடன் மனவலியையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும்போல் உள்ளதே. சர்ச்சிலின் நகைச்சுவையுணர்வும் சுவாரஸியமாக உள்ளது.

  மொபைலையே தூக்கி சாப்பிடும் அளவில் பேருந்தில் பாட்டு போடுவாங்களே, அதையும் சொல்லி மாளாது.

  Like

 4. ramachandran சொல்கிறார்:

  ayyasamy itha kodumai busil mattum illai…train payanathilum kodumai kodumai…althu thunka mudiyathu. athikalail 4 amkka subrabatham padavaithu vidukinranar…. ithil rempa pavam kaikulanthaiudan payanippavarkal than…

  Like

 5. chollukireen சொல்கிறார்:

  எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். மொபைல் கொண்டுவராதவன் பாடுதான் திண்டாட்டம். நேரில் அனுபவித்தமாதிரி உள்ளது.

  Like

 6. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s