கழுத்தறுக்கும் யுனிகோடு…!

Posted: 06/05/2014 in கவிதை, கருத்து, இதழியல்
‘யுனிகோடு’ இத்தனை கழுத்தறுப்பாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே இல்லை. 18 ஆண்டாக, ஒரு முறையில் தட்டச்சி விட்டு, இப்போது வலைப்பதிவுக்கென புதிய முறைப்படி தட்டச்சுவது மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. ஸ்ரீலிபி எழுத்துருக்களை, மாடுலர் கீபோர்டில் தட்டச்சித்தான் எனக்குப் பழக்கம். அதில், ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பெல்லாம், பிரச்னையே இல்லை. முதலில், கொம்பை தட்டச்சி, பிறகு அதற்குரிய எழுத்தை தட்டச்சினால் போதும். அதாவது, நாம் எழுதுவதைப்போல.

ஆனால், இந்த யுனிகோடு முறைக்கு வந்தபிறகு, எழுத்தை முதலில் தட்டச்சிவிட்டு, பிறகு கொம்பையும், துணைக்காலையும் தட்டச்ச வேண்டியிருக்கிறது. அலுவலகத்தில் அப்படியும், வெளியில் இப்படியும், என்று இரு வேறு முறைப்படி தட்டச்சுவதில் தான், எத்தனை இம்சை…!
மற்றொரு பிரச்னை, வலைப்பக்கத்தில், யுனிகோடு பயன்படுத்தி, நான் சரியாகவே தட்டச்சிய வார்த்தைகளில், கொம்பு முன்பின் மாறி, பிழையுடன் இருப்பதாக, நண்பர்கள் கூறியதுதான். என் வலைப்பக்கத்தில், எழுத்துப்பிழைகளை காணோம். ஆனால், வேறு சில நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் பார்த்தபோது, கொம்புகள், இடவலமாக மாறியுள்ளன. ஆகவே, பிழைகள் வந்து விடுகின்றன. இந்த பிரச்னைக்கு யாராவது, நண்பர்கள் தீர்வு சொன்னால், தன்யன் ஆவேன்.

பின்னூட்டங்கள்
 1. karanthaijayakumar சொல்கிறார்:

  NHM Writer தரவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்துவீர்களேயானால், பழைய டைப்ரைட்டர் போலவே தட்டச்சு செய்யலாம்.
  முயற்சித்துப் பாருங்கள் நண்பரே

  Like

 2. ranjani135 சொல்கிறார்:

  இந்தப் பதிவைப் பார்த்து எனக்கு மிகவும் வியப்பு. தமிழில் தட்டச்சு செய்ய இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களா? கூகிள் transliteration பக்கத்திற்குப் போய் தமிழ் பான்ட் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் EN என்று வரும். அதன் அருகில் cursor-ஐ கொண்டுபோனால் இரண்டு மொழி EN மற்றும் தமிழ் என்பதற்கு த என்றும் வரும். நீங்கள் த வை செலக்ட் செய்தால் நீங்கள் ஆங்கிலத்தில் என்ன தட்டச்சினாலும் தமிழில் வரும். எப்போது வேண்டுமானாலும் ஆங்கிலத்திற்கு மாறலாம். வருடங்கள், தேதிகள், போன்ற எண்கள் தட்டச்சு செய்யும் போது நான் ஆங்கிலத்திற்கு மாறுவேன். கொம்பு போடுவது எல்லாம் பிரச்னையே இல்லை.

  முயற்சி செய்யுங்கள்.

  Like

  • தங்கள் ஆலோசனைக்கு நன்றி மேடம். தாங்கள் கூறியபடி கூகுள் டிரான்ஸ்லிட்ரேசன் மூலம் தட்டச்சு பழகி வருகிறேன். மாடுலர் முறைப்படி இவ்வளவு நாட்களாக தட்டச்சி விட்டு புதிய முறைக்கு மாறுவது சிரமமாக இருக்கிறது மேடம். அதுதான் என் பிரச்னை.

   Like

 3. ootynews சொல்கிறார்:

  http://blog.zquad.in/2008/10/nhmwriter.html இதை படித்துபார்த்து http://software.nhm.in/products/writer கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து ஸ்ரீலிபி மாடுலரில் டைப் செய்யலாம்.

  Like

 4. amuthan சொல்கிறார்:

  ஆறுமுகம் அய்யா சாமி அவர்களுக்கு உள்ள பிரச்னை எனக்கும் உள்ளது. என்எசஎம் ரைட்டரை நானும் பயன்படுத்த முயற்சிக்கிறேன்.

  Like

  • அமுதன் சார் வாங்க வாங்க…! என்.எச்.எம்., ரைட்டரில் பிரச்னைக்கு தீர்வில்லை போலிருக்கிறது. வேறு ஏதாவது வழிமுறைகளை தேடிக் கொண்டிருக்கிறேன், சார். வருகைக்கு நன்றி சார்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s