ஆணைய உத்தரவுக்கு பயந்து யாரேனும், பணம் கொடுக்காமல் இருக்கிறார்களா? வாங்காமல் இருக்கிறார்களா? பணம் கொடுப்பதும், வாங்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆணையத்தின் ஆட்டம் எல்லாம், தேர்தல் முடியும் வரை தான் என்று, எல்லோருக்கும் தெரியும். அதனால் தான், அதன் உத்தரவுகளை டிவி சேனல்கள் முதல், அரசியல் கட்சிகள், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் வரை, யாருமே பொருட்படுத்துவதில்லை.
தேர்தல் ஆணையம் பிடுங்கிக் கொண்டிருப்பது எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று அதிகாரிகள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது. ‛பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; அது உங்கள் பணம்’ என்று, முன்பு விஜயகாந்த் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்; இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் சாெல்ல ஆரம்பித்து விட்டார். அதையும் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, பணம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்; பொருள் கொடுப்பவர் கொடுக்கலாம்; வாங்க விருப்பம் உள்ளவர்கள், வாங்கிக் கொள்ளலாம் என்று, தானே முன்வந்து அறிவித்து விடுவது தான், ஆணையத்துக்கு கொஞ்சமாவது மரியாதையாக இருக்கும். ‛கொடுப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு, உங்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுப்பதே வரும்காலங்களில் சரியான முடிவாக இருக்கும். ஏதோ, அதன் மூலம் நமக்கும் கொஞ்சம் பலன் கிடைத்தது போலவும் இருக்கும்.
பணம் கொடுப்பது என்பதே முறையற்ற செயல்தானே ஐயா
LikeLike
வாருங்கள் ஐயா. பணம் கொடுப்பதையோ வாங்குவதையோ தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரை காப்பாற்றவே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினருக்கு இத்தகைய சலுகைகள் கிடைப்பதில்லை என்பதால் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதுவே விபரீத சிந்தனைக்கு காரணம். மற்றபடி நானும் லஞ்சத்துக்கு எதிரி தான். கருத்துக்கு நன்றி ஐயா
LikeLike
sir arumayana karuthu
LikeLike