உப்புமா நானூறு

Posted: 09/03/2014 in கவிதை
குறிச்சொற்கள்:, , , , , , , , ,
தேர்தல் தேவதைக்கு
தீரா தலைவலியாம்!
தீயவர் கேட்பதெல்லாம்
தோதான ஒரு வரமாம்!

தான் மட்டும் வென்றிடவும்
பிறரெல்லாம் தோற்றிடவும்
தரவேண்டும் வரமென்று
தயங்காமல் கேட்கின்றார்!

 
கேட்ட வரம் கொடுத்திடத்தான்
தேவதைக்கும் ஓராசை!
அனைவருமே கேட்பதுபோல்
அள்ளி அள்ளி வீசுதற்கு
ஆசியா பத்தாது;
ஐரோப்பாவும் தான் வேண்டும்!

கட்சிகளை காட்டிலுமே
கூட்டணிகள் அதிகம் என்பார்!  
ஓட்டளிப்போர் கேட்கும் வரம்
ஓரளவு தந்திடலாம்!
கூட்டணிக்கு ஆள் பிடிப்போர்
கேட்கும் வரம் யார் தருவார்?

எண்ணி எண்ணிப்பார்த்ததிலே
வந்ததிந்த தலைவலியாம்!
தேர்தல் தேவதைக்கு
தேவையிப்போ நிம்மதியாம்!

தூயவர் யாருமில்லை;
துயரமே முடிவில்லையா?
கதறி விட்டாள் தேவதை தான்!
காத்தருள்வார் யார் யாரோ?

பின்னூட்டங்கள்
  1. karanthaijayakumar சொல்கிறார்:

    இத்தேர்தல் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான தேர்தல்தான்

    Like

  2. தங்கராஜ் சொல்கிறார்:

    தூயவர் யாருமில்லை; – உண்மை
    துயரமே முடிவில்லையா? – நீங்கள் நின்றால் ஒருவேளை துயரம் முடியலாம்…
    கதறி விட்டாள் தேவதை தான்! – தேவதை வயதுக்கு வந்தாச்சா ???

    #அட ஓட்டு போடற வயதை கேட்டேனுங்க…….

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s