மக்கள் படும்பாடு
மழையின்றி பெரும்பாடு!
மாடு கன்று வைத்திருப்போர் நிலையெல்லாம் என்னாகும்?
காடெல்லாம் காய்ந்து போனால்
மான் கூட்டம் எங்கு போகும்?
மழையே மழையே!
உனக்கென்ன கேடு?
மாதம் ஒரு முறை
வா என் வீடு!
காய்ந்து வெடித்த நிலம்
கதறித்தான் அழுதிடுமா?
முப்போகம் விளைந்த பூமி
முனகித்தான் பார்க்கிறதோ?
மண்புழுக்கள்
மடிவது கண்டு
முட்செடியாய்
முளைக்கிறதோ?
கூட்டமாய் தேடி வரும்
கொக்கு குருவிக்கெல்லாம்
கட்டாந்தரை ஆன குளம்
என்ன பதில் சொல்லிடுமோ?
அன்பொழுக அழைத்திருந்தேன்! ஆடியும்தான் பார்த்து விட்டேன்! அத்தனைக்கும் பயனில்லை
அதனால் தான் கேட்கின்றேன்!
மழையே மழையே
உனக்கென்ன கேடு?
மரியாதை கெட்டு விடும்;
மாசிக்குள் பெய்து விடு!
இயற்கைக்கு செய்த துரோகங்கள்
கொஞ்சமா…? நஞ்சமா…?
எப்படி வரும்..?
ஏங்க வைக்காதே…
திருந்தி விடுகிறேன்…
திருத்தவும் செய்கிறேன்…
வந்து விடு…!
LikeLike
வாங்க தனபாலன் சார்! வருகைக்கு நன்றி. நல்லோர் ஒருவர் உளரேல் என்ற வள்ளுவர் வாக்கு பொய்யாகி விடக்கூடாதே என்கிற கோபம் தான் மழையை மிரட்டக்காரணம் சார்!
LikeLike
ஏதேனும் சிறப்பு பூஜை உண்டா..? மழை வேண்டித்தான் வேறுஎதுவும் இல்லை..
LikeLike
மழை வராமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்தான் செய்துவிட்டோமே.
LikeLike
வாங்க ஜெயக்குமார் சார்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
LikeLike
சும்மா இருந்தாலே வராத மழையை, இப்படி மிரட்டி & உருட்டி கூப்பிட்டால் வந்துவிடுமா என்ன ! வரவேண்டும் விரைவில் !
LikeLike
வாங்க மேடம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படியாவது மழை பெய்யாதா என்றொரு நப்பாசை தான் மேடம்.
LikeLike
மார்கழி, தை போய் மாசி வந்தா டாப்பா வந்திடுவீங்க…
(மழைய சொல்லலீங்கோவ்)
#நான் உங்கள சொன்னேன் மச்சான். .
LikeLike
kaatru megathai adiththaalthaan malaivarum neengal alaithathil thavarethum illai
LikeLike