24/11/2013 க்கான தொகுப்பு

Uppuma kavithaigal

Posted: 24/11/2013 in கவிதை
குறிச்சொற்கள்:, ,

உப்புமா (சுய) விமர்சனம்-1

‘முகநூல்’ புண்ணியத்தில்
முழு நேரமாய் கவிதை கிண்டும்
‘உப்புமா’ கவிஞர்கள்
இப்பவே பல கோடி!

தத்தென்றும் பித்தென்றும்
தரிகிடத்தோம் என்றும்
தாம் என்றும் தூம் என்றும்
தர்மத்துக்கு எழுதுகின்றார்!

கத்தையாய் எழுதியெழுதி
காகிதத்தை கறுப்பாக்கி
புத்தகமாய் அச்சிட்டால்
பத்து பைசாவும் தேறாது!

விற்கவும் ஆளில்லை
வாங்கவும் வாய்ப்பில்லை
விளங்கியதால் தான் இந்த
விபரீத முடிவெல்லாம்!